Wednesday, April 20, 2011

kuppai sitharalgal

சுத்தம் சுகம் தரும்
சுற்றுசுழல்  விழிப்புணர்வு 
சுகமான மாற்றம் வீட்டிலும் வீதியிலும் 
தன்னை பேணுவதிலும் தன் சுற்றம் பேணுவதிலும் 
கவனம் செலுத்தும் மானிடம் குறித்து 
மட்டற்ற மகிழ்சி மனதில் நிழலாடுது 
நாளைய தலைமுறை நலமான பூமியில் 
வளமாய் வாழ்ந்திட வழிசெயும் 
சின்னஞ்சி சிறு முயற்சி நன்று 

புறம் பேணும் என் தோழர்காள் 
அகம் பேணும் முறை நீ  அறிவாயோ
மனிதன் பாதி மிருகம் பாதியாய் 
வாழும் நிலை யானோ 
கரணம் அறியாயோ 
விண்ணை தாண்டி வீடு கட்ட துடிக்கும்  உள்ளமே 
உன்னை தாண்டி விண்ணை தொடும் ஆற்றல் அறியாயோ 

வாழும் வரை உன் உள்ளம் குப்பையாய் 
சுகமிழந்து சோகம் சுமந்து தள்ளாடும் நிலை அறியாயோ 


உள்ளமது செம்மையானால் மந்திரங்கள் செபிக்க தேவை இல்லை 
நம் முன்னோர் சொல் கேளாயோ 


உள்ளம் காக்க சில நொடிகள் ஒதுக்குவோம் 
 உள்ளம் மகிழ்ந்து உயர்வோம் .