Monday, October 17, 2011

கூடங்குளம் என்னும் பேரரக்கன்

 
கூடங்குளம் என்னும் பேரரக்கன்...

நேற்று இன்ஜினியரிங் கல்லூரியில் கூடங்குளம் அணுமின் நிலையம் தேவையா தேவையில்லையா எனும் விவாதம் நடந்தது அதில் பேசும் வாய்ப்பு கிடைய்தது. வந்திருந்த எல்லா இன்ஜினியரிங் மாணவர்களும் கூடங்குளம் அணுமின் நிலையம் தேவை என்று பேசிகொண்டிருந்தார்கள். அவர்கள் முன்வைத்த வாதம் பின்வருமாறு :
1. நாட்டின் மின் தேவையை பூர்த்தி செய்ய அணுமின் நிலையம் அவசியம். 
2. இது 3 generation டெக்னாலஜி யால் கட்டபட்டது. அதனால் அதிக பாதுகாப்பு உள்ளது. சுனாமி கூட தாக்க முடியாத அளவு 8 அடி, கடல் மட்டத்திலிருந்து உயரே கட்டப்பட்டுள்ளது .
 3 . நமது பிரதமர் நமது பாதுகாப்பில் அதிக அக்கறை எடுத்துள்ளார் அதனால் பயப்பட தேவை இல்லை.
4. நாட்டின் முன்னேற்றத்துக்கு இந்த மக்கள் ஏன் கொஞ்சம் தியாகம் செய்யகூடாது .
5. தொழில் வளர்ச்சியடைய மின் தேவையை நாம் அணுமின் வழியாக தமிழகம் 925 mv மின்சாரம் இதன் மூலம் பெறுகிறது .
6 . சுற்றுசூழல் பாதிக்காது, இயற்கை பேரழிவு வந்தாலும் நாம் அறிவியல் வல்லுனர்கள் அதை எதிர்கொள்ள புதிய தொழில் நுட்பம் வைத்திருகிறார்கள் என்று சொன்ன கருத்தையே கிளிபிள்ளை போல சொன்னார்கள். 

ஒரு பக்கம் இவர்களை பார்த்து வருத்தம் மக்களை பற்றி அக்கறை இல்லாத தொழில் நுட்ப வல்லுனர்கள் உருவாகு கிறார்களே என்று, மற்றொரு பக்கம்  நம் தொழில் நுட்ப வலுனர்கள் மீது வைத்துருக்கும் கண்முடித்தனமான நம்பிக்கை எனக்கு நகைப்பு கொடுத்தது .

ஏன் இந்த கூடங்குளம் அணுமின் நிலையம் தேவைஇல்லை என்று இவர்கள் வைத்த வாதத்தை வைத்தே பேசினேன் .

வாதம் 01

உலகில் அணு உற்பத்தியால் பெறப்படும் மின்சாரம் வெறும் 4 % (நான்கு விழுகாடு ) தான். இது கடந்த இருபது வருடமாக இப்படியே தான் உள்ளது . வளர்ச்சி அடைந்த நாடுகள் கூட இப்போது பயோ டெக்னாலஜி முறை பின்பற்ற அணைத்து முயற்சியும் எடுகிறார்கள். நம் தமிழகத்தில் கூட காற்றாலை மின்சாரம், கடல் நிரிலிருது மின்சாரம் எடுத்தல் போன்ற முயற்சி நடை பெறுகிறது. சேலத்தில் 8 ஆம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவன் நாம் ஏறும் ஏணிபடியல் இருந்து மின்சாரம் தயாரிக்க முடியும் என்று கண்டு பிடித்துள்ளன். இது போன்ற சுற்று சூழலுக்கு பாதிப்பில்லாத கண்டு பிடிப்புகளை அரசு உற்சாகபடுத்த வேண்டும்.

வாதம் 02 . 

கடல் மட்டத்தில் இருந்து 8 அடி உயரத்தில் உலை கட்டப் பட்டுள்ளதால் சுனாமி கூட தாக்க முடியாது என்பது உண்மையாய் இருக்கலாம். ஆனால் இயற்கை சக்தி நம்மை விட உயர்ந்தது. அதையும் தாண்டி கூடங்குளம் அணுமின் நிலையம் அமைக்கப் பட்டுள்ள இடம் எரிமலை உருவாகும் அபாயம் உள்ள பாறை என்பதை விஞ்சானிகள் மறைக்கிறார்கள். ஏற்கனவே பல ஆய்வுகள் இதை நிருபித்து இருக்கிறது . (பார்க்க : Dr . ராஜன் எழுதிய 'கூடங்குளம் அணுமின் நிலையமும் எரிமலை அபாயமும்' என்ற புத்தகம் பல நிலவியல் அறிஞர்களின் ஆராச்சி சான்றுகளோடு எழுதப் பட்டுள்ளது )
வாதம் 03

பிரதமரின் அக்கறை எப்படி இருக்கும் என்பதற்கு நமது தமிழக மீனவர்கள் ஒவ்வொரு நாலும் இலங்கை கடற்படையால் தாக்கப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள் இந்தியா என்ன செய்தது. வேடிக்கை பார்த்துக்  கொண்டிருகிறது. அமைச்சர் கிருஷ்ணா கடல் எல்லைய தாண்டின அவர்கள் அடிக்கதான் செய்வார்கள் என்று ராஜபக்தேவுக்கு வக்காலத்து வாங்குகிறார். கட்சிகள் சத்தம் போட்டால் வெளிஉறவு செயலரை அனுப்புவர் பிரதமர். அவர் அங்கு போய் ராஜ்பக்தே சோத்த தின்னுட்டு பல்ல கட்டிட்டு வருவார் இதுதானே நடக்கிறது. தமிழக கடல் எல்லையில் 100 க்கு மேற்பட்ட மீனவர்கள் இலங்கை ராணுவத்தால் கொள்ளப் படுள்ளர்கள் இந்திய பிரதமர்  நேரில் வந்து அறுதலாவது சொன்னாரா. தமிழன் இருந்தால் என்ன செத்தால் என்ன என்றுதான் இருக்கிறார். இந்திய அரசு எப்போதும் தமிழர் எதிர்ர்ப்பு நிலைபாடுதான் எடுக்கும். 

வாதம் 04

நாட்டுக்காக நாம் ஏன் தியாகம் செய்யகூடாது நல்ல கேள்வி இதை இந்திய அரசு தமிழகத்தின் பக்கத்துக்கு மாநிலத்திடம் கேட்க வேண்டும். தமிழருக்காக கேரளா முல்லை பெரியார் அணையில் கொஞ்சம் தியாகம் செய்யக் கூடாதா?, கர்நாடக காவிரியில் கொஞ்சம் தியாகம் செய்யக் கூடாதா?, ஆந்திரா பாலாற்றில் கொஞ்சம் தியாகம் செய்யக் கூடாதா? தமிழனுக்கு உதவி செய்ய இந்தியாவில் எவனும் வரமாட்டன். தமிழன் மட்டும் இளிச்சவாயனா ?

வாதம் 05.
 
கூடங்குளம் அணுமின் நிலையம் மின்சாரம் வெறும் 925 mv மட்டும் தான் தமிழகத்துக்கு கொடுகிறது அதிலும் 500 mv இலங்கைக்கு செல்லும் (ஏற்கனவே கொடுதுகொண்டிருகிறோம் ), அப்படியானால் வெறும் 425 mv மின்சாரம் மட்டும் தான் தமிழகத்துக்கு. இதை கேரளாவில் கொண்டு போய் செயல் படுத்தினால் என்ன? இல்லை இந்தியாவை ஆட்டிபடைக்கும் இலங்கைக்கு கொண்டுபோனால்  என்ன? தமிழன் மட்டும் சாக வேண்டும் மற்றவன் எல்லாம் சுகமாக வாழ வேண்டுமா என்ன கொடுமை இது.

வாதம் 06.

சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லை என்று விஞ்சானிகள் பொய் சொல்வதை பார்த்தல் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் என்ன என்ன கோல் மால் எல்லாம் நடக்கிறதோ என்று புரியவில்லை. அணு உலையை  குளுர்விக்க அதன் மேல் உற்றபடும் தண்ணிர் அணு கதிர் கலந்து வெளி ஏறும் என்பது எல்லோருக்கும் தெரியும் அங்கிருந்து வரும் காற்று அணு கதிர் தாங்கி வெளி வரும் இது கடல் உயிருக்கு தீங்கு விளைவிக்கும் அங்கு உற்பத்தியாகும் மீன் அதனால் பதிக்கப்படும். அதை சாப்பிடும் எல்லோரும் பாதிக்கப் படுவார்கள் என்பது உண்மை.

சென்னை கல்பாக்கம் அணுமின் நிலையம் நன்றாய் உள்ளது என்கிறார்கள் ஆனால் அங்குள்ள மருத்துவமனைகளில் நோயாளிகள் எதனால் பதிக்கப்பட்டு வருகிறார்கள் என்று பார்த்தால் அனுகதிரினால் தான். கான்செர், தோல் வியாதி, உடல் உணமுற்ற குழந்தைகள் அதிகம் பிறப்பு என்று சாதாரண மக்கள் படும் வேதனை பற்றி எந்த விஞ்சானிக்கு கவலை ? 

மக்களுக்காக... 

கூடங்குளம் அணுமின் நிலையம் பிரச்சனை எளிதில் தீர்க்கப்பட தடையாய் இருப்பது விஞ்சானிகளின் ஈகோ தான். நங்கள் மெத்த படித்தவர்கள் இவர்கள் படிக்காத முட்டாள்கள்  இவர்கள் எங்கள் சாதனையை கேள்வி கேட்பதா என்ற ஈகோ வினால் பணியை நிறுத்த முடியாது என்று தலை கிழாக நிற்கிறார்கள்.


மக்களின் போராட்டம் நியாயமனதே. அரசு வரும்  5 ஆண்டுக்குள் கூடங்குளம் அணுமின் நிலையம் சுற்றி 5kilometar உள்ள அணைத்து மக்களையும் வெளியேற்றும் என்பது உண்மை. அரசே செய்யா விட்டாலும் மக்கள் வெளியே போக வேண்டிய சுழல் வரும். தங்கள் உடமை , நிலம் , உறவு , தொழில் , பண்பாடு எல்லாம் இழந்து அகதிகளாக சொந்த நாட்டிலேயே திரிய வேண்டிய நிலை வரும். காரணம் அணு கதிர் வீச்சில் இருந்து தங்களை தங்கள் சந்ததியை காப்பற்ற தாங்களாகவே ஊரை காலி செய்ய வேண்டும். இந்த நிலை தேவையா ?

முன்னேற்றம் என்பது மக்களுக்காக தான், மக்கள் முன்னேற்றத்துக்காக அல்ல என்பதை விஞ்சானிகள் உணர வேண்டும். மக்கள் வாழும் இடம் சுடுகாடாய் மாறிய பின் அதன் மேல் யாருக்காக தொழில் முன்னேற்றம் வேண்டும் அரசு அதிகாரிகள் ஆட்சியில் இருப்போர் சிந்திக்க வேண்டும்.

படித்தவர்கள், சிந்திக்கும் திறன் உழவர்கள் ...

கூடங்குளம் அணுமின் நிலையம் எதிர்ப்பு குழு வினர்க்கு படித்தவர்கள், சிந்திக்கும் திறன் உள்ளவர்கள் உதவ முன்வர வேண்டும். இந்தியாவில் இப்போது ஒய்வு பெற்ற பெரியவர்கள் சமூக பணிக்கு வரத் தொடங்கி இருகிறார்கள் நல்ல அறிகுறி நாடு முன்றும் என்பதற்கு. கூடங்குளம் அணுமின் நிலையம் மூடப்பட்ட வேண்டும் என்று ஒய்வு பெற்ற அரசு அதிகாரிகள் சிலர் பொது நல வழக்கு தொடர்ந்திருப்பது மக்கள் போராட்டம் சரியானதே என்பதற்கு சான்றாகும். ஆகவே, பொது மக்கள் இந்த போராட்டத்துக்கு ஆதரவு கொடுக்க வேண்டும். நாட்டின் சுற்று சூழலில் நமக்கு அக்கறை உள்ளது அன்று அரசுக்கு தெரிய படுத்த வேண்டும்...












Wednesday, April 20, 2011

kuppai sitharalgal

சுத்தம் சுகம் தரும்
சுற்றுசுழல்  விழிப்புணர்வு 
சுகமான மாற்றம் வீட்டிலும் வீதியிலும் 
தன்னை பேணுவதிலும் தன் சுற்றம் பேணுவதிலும் 
கவனம் செலுத்தும் மானிடம் குறித்து 
மட்டற்ற மகிழ்சி மனதில் நிழலாடுது 
நாளைய தலைமுறை நலமான பூமியில் 
வளமாய் வாழ்ந்திட வழிசெயும் 
சின்னஞ்சி சிறு முயற்சி நன்று 

புறம் பேணும் என் தோழர்காள் 
அகம் பேணும் முறை நீ  அறிவாயோ
மனிதன் பாதி மிருகம் பாதியாய் 
வாழும் நிலை யானோ 
கரணம் அறியாயோ 
விண்ணை தாண்டி வீடு கட்ட துடிக்கும்  உள்ளமே 
உன்னை தாண்டி விண்ணை தொடும் ஆற்றல் அறியாயோ 

வாழும் வரை உன் உள்ளம் குப்பையாய் 
சுகமிழந்து சோகம் சுமந்து தள்ளாடும் நிலை அறியாயோ 


உள்ளமது செம்மையானால் மந்திரங்கள் செபிக்க தேவை இல்லை 
நம் முன்னோர் சொல் கேளாயோ 


உள்ளம் காக்க சில நொடிகள் ஒதுக்குவோம் 
 உள்ளம் மகிழ்ந்து உயர்வோம் .